சுட சுட செய்திகள்

Friday, April 20, 2012

எவ்வளோ பண்றோம்... இத பண்ண மாட்டோமா


எவ்வளோ பண்றோம்... இத பண்ண மாட்டோமா...’ என்று தமிழகத்தில் இன்றைக்கு பலபேரும் சொல்லும் ஒரு மந்திரம் வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு உன்னத தத்துவம். எப்படி? இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க...(சும்மா கற்பனை தான்)

பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம ஏகாம்பரம் .
உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.
முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”
2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.
நம்ம ஏகாம்பரதிற்கும்   ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!
“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.
அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”
இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.
ஏகாம்பரம் - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”
இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”.
சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.
”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், ஏகாம்பரம்.
ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.
இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.
அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம ஏகாம்பரம்.
ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.
டிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்...
“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா... ” - மனசுக்குள் ஏகாம்பரம்.
”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”
ஏகாம்பரம் அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!
ஏகாம்பரம் ஆரம்பித்தார்.
மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.
கோயம்புத்தூர் பக்கம். நீங்க?”என்னங்க சிரிச்சு முடிச்சிட்டிங்களா?
இந்த கதையில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது . நீங்கள் கவனித்தீர்களா?
எந்த சூழ்நிலையிலும் நம் தன்னம்பிக்கையை விட்டுவிடக்கூடாது என்பது மட்டுமல்ல. மனம் தளராமல் எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்பது தான். நம்ம ஏகாம்பரத்திற்கு எதுவுமே தெரியாது என்றாலும் அவர் என்னதான் நடக்குதுன்னு பாப்போமே என்று தீர்கமான மனதுடன் இருந்தாரே அது தான் இந்த கதையின் ஹை லய்ட்.

சரி. இப்போது விசயத்திற்கு வருவோம்.
இந்த உலகத்தில் எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற துணிவு இல்லாத மனிதர்கள் , நிச்சயமாக சாதித்ததாக வரலாறு இல்லை. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என்று தான் கொண்ட குறிகோளுக்காக துணிவுடன் போராடும் மனம் படைத்த மனிதர்கள் தான், சாதனையாளர்கள் பட்டியலில் அமர்ந்து இருக்கிறார்கள்.
இன்றைக்கும் பல மாணவர்கள் தன் கல்லூரி படிப்பை முடித்து விட்டு, வேலைக்காக பல நிறுவனங்களை அணுகும் போது நெஞ்சம் படபடக்கத்தான், நேர்முக தேர்வை எதிர்கொள்ளுகிறார்கள்.
என்ன கேட்பார்களோ? ஆங்கிலத்தில் தான் கேட்பார்களோ? எப்படி சொல்வது என்று இன்னும் பல பேர் வாசற்படி வரை சென்று , குனிந்த தோளோடு கவலை தோய்ந்த முகத்தோடு திரும்பி வந்து விடுகிறார்கள்.
தெரிகிறதோ இல்லையோ எதையும் எதிர்கொள்வோம் என்ற நேர்மறை எண்ணத்துடன் இருக்கும் பல பேர்,  பணி வாய்ப்பு பெற்று நல்ல பதவியில் இருப்பதை இன்றைக்கும் நான் பார்கிறேன். யாருமே எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வாழ்வதில்லை. அத்தனை விசயங்களையும் ஒரு தனி மனிதன் தெரிந்து இருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. இதை நேர்முக தேர்வுகளை நடத்தும் அவர்களுக்கும் நன்றாக தெரியும். என்றாலும் போட்டியாளரின் தன்னம்பிக்கை, பேச்சு திறமை, சாதூர்யம் இவற்றை தான் அவர்கள் எதிர் பார்கிறார்கள். போட்டியாளரின் அறிவு திறமையை அல்ல.
ஆனால் நாம் பல பேர் , இந்த ஒற்றை விசயத்தில் கோட்டை விட்டு விடுகிறோம். அவர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் நம்மால் பதில் சொல்ல முடியாதே என்கின்ற ஒரு தாழ்வு மனப்பான்மையில் , போட்டியில் பங்கு பெறுவது கூட கிடையாது. முதலில் கதவுகளை தட்டுங்கள். கண்டிப்பாக கதவுகள் திறக்கும்.  எது வேண்டும்  என்று முதலில் வாய் திறந்து
கேளுங்கள். அது  கண்டிப்பாக கிடைக்கும். இது தான் இயற்கையின் நியதி.
புதிதான இடத்திற்கு பயணம் போகிறிர்களா? பயப்படாமல் செல்லுங்கள். அங்கு போய் உங்கள் திறமைகளை, மற்றவர்களை பார்த்து வளர்த்துக் கொள்ள முடியும்.
மொழி பிரச்னை ஒரு கவலையா? ஒரு மனிதனால் ஒரு மாதத்தில் பிற மொழிகளை கற்று கொள்ள இயலும்.
இந்த உலகத்தின் கதவுகள் சாத்தப்படிருக்கலாம் .ஆனால் அடைக்கபடுவதில்லை. வேண்டும் வேண்டும் என்கின்ற ஆசையை மட்டும் விட்டு விடாதிர்கள். அதுதான் உங்களை உற்சாகப்படுத்தும் மந்திர தீ. அது மனதில் கொழுந்து விட்டு எரிந்தால் எந்த சூழ்நிலையும் நமக்கு சாதகமாக மாறிவிடும். பயம், எதிர்மறை எண்ணம் யாவும் தூள் தூளாகும். அப்புறமென்ன..?   இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்.துணிந்த உள்ளம் துணிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும் என்று  நொடி பொழுதும் உற்சாகமாக பாடி கொண்டே இருப்பிர்கள்.
எக்காரணத்தை கொண்டும் நமக்கு இதெல்லாம் சரி பட்டு வராது என்று முடிவு கட்டி விடாதிர்கள். அது எதிர்மறை எண்ணத்தின் வெளிப்பாடு. துணித்து இறங்குங்கள்.
சாதனைக்கு  துணிந்து விட்டால் எந்த  ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும். நீங்கள்  நிச்சயம் வெற்றி அடைவீர்கள்  அந்த ஏகாம்பரம் போல.
துணிவினை விழியில் சுமந்து – துயரத்தின்

தூரத்தை நீ கடக்க வேண்டும்
முன்னேறத் துணிந்து விட்டால்
துணைக்கு வர
சூரியன் மறுக்குமா?
வா வா வசந்தம் உன்னை அழைக்கிறது
வானவில்லில் மேகம் – உனக்காய்
பாதை விரிக்கிறது.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...